லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா ?
1 தை 2025 புதன் 05:25 | பார்வைகள் : 349
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக்கான முக்கியத்துவம் அளவுக்கு மீறி உள்ளது. மேக்கப் செய்ய ஆர்வம் இல்லாதவர்கள் கூட லிப்ஸ்டிக்குடன் vஅலம் வருகின்றனர். ஆனால் லிப்ஸ்டிக்கின் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். சில லிப்ஸ்டிக்குகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உண்டு.
லிப்ஸ்டிக்கில் உள்ள ஈயம், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். பித்தலேட்டுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும்.
பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் போன்றவற்றின் பயன்பாடு நரம்பு மண்டலத்திற்கும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது.பாரபின் (மெழுகு) ரசாயனமும், சருமத்துக்குள் ஊடுருவி சரும எரிச்சல், புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
லிப்ஸ்டிக் வாங்கும் முன், அதில் உள்ள பொருட்களை கவனித்து, அது எவ்வளவு பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துகொள்ள வேண்டும்.லிப்ஸ்டிக்கில் ஈரத்தன்மை ஏற்படுவதால், உதடுகளில் திடீரென அரிப்பு ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
பெரும்பாலான ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் ஏற்படக்கூடும்.லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
பெட்ரோ கெமிக்கல்கள், நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உருவாக்கலாம்.அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் காட்மியம் அதிக அளவில் இருக்கும்.