புதிய ஆண்டில் அதிகரிக்கும் மருத்துவ காப்புறுதி.Mutualité française
1 தை 2025 புதன் 09:48 | பார்வைகள் : 1417
புதிய (2025) ஆண்டில் மருத்துவ காப்புறுதியின் மாதக் கட்டணம் உயர்ந்துள்ளது சராசரியாக இந்த உயர்வு 6% சதவீதம் என Mutualité française தெரிவித்துள்ளது. துல்லியமாக குறிப்பிடுவதானால் இந்த உயர்வு தனியாக காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு 5.3% சதவீதமும், வேலையில் நிறுவனங்கள் மூலம் காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு 7.3% சதவீதமும் அதிகரித்து உள்ளது.
18.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய 38 பரஸ்பர காப்புறுதி நிறுவனங்களை ஒன்றிணைக்கும் Mutualité française வெளிப்படுத்திய புள்ளி விவரங்களின்படி இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023 இல் 4.7% க்கும் அதிகமாகவும், 2024 இல் 8.1% க்கு அதிகமாகவும் உள்ளது.
இந்த அதிகரிப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கியமாக கடந்த டிசம்பர் மாதம் மருத்துவர்களை நோயாளிகள் சந்திப்பதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதே காரணம் என சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக பொது மருத்துவரை சந்திப்பதற்கான கட்டணம் முன்பு 26.50€ யூரோக்களில் இருந்து 30.00€ அதிகரித்ததும், சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்கான கட்டணம் 56.50€ யூரோக்களில் இருந்து 60.00€ யூரோக்களாகவும் அதிகரித்ததே என தெரிவிக்கப்பட்டுள்ளது.