Paristamil Navigation Paristamil advert login

ஏமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் 

ஏமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் 

1 தை 2025 புதன் 09:53 | பார்வைகள் : 598


யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் யுத்தகப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள்மீதே தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம்  தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை ஆரம்பமான இந்த தாக்குதல்கள் செவ்வாய்கிழமையும் இடம்பெற்றன.

கப்பல்களில் இருந்து விமானங்கள் புறப்படுவதையும் ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெறுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் கட்டளைப்பீடம்,நவீன மரபுசார் ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை இலக்குவைத்ததாக  அமெரிக்கா தெரிவித்துள்ளது. இங்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வைக்கப்பட்டிருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ராடர்நிலையத்தையும்,ஏழு குறுஸ் ஏவுகணைகளையும்,ஆளில்லா விமானங்களையும் அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யேமன் தலைநகர் சனாவில் பல பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சனாவில் பாதுகாப்பு அமைச்சு இலக்குவைக்கப்பட்டது வெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் சார்பு ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் சகாக்கள் மற்றும் இராணுவ வர்த்தக கப்பல்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தாக்குதல் அமெரிக்கா தெரிவித்துள்ளது.