Paristamil Navigation Paristamil advert login

விளையாட்டு அரங்கிற்கு தீ வைப்பு!!

விளையாட்டு அரங்கிற்கு தீ வைப்பு!!

1 தை 2025 புதன் 09:58 | பார்வைகள் : 1202


குளிர்கால patinoire (பனிச்சறுக்கு வளையம்) Mantes-la-Jolie நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக விரோதிகள் இருவர் அதற்கு தீ வைத்துள்ளனர்.

Val Fourré அரங்கில் குறித்த கேளிக்கை நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை இரு நபர்கள் அதற்கு தீவைத்து எரித்துள்ளனர். அத்தோடு அதன் பாதுகாவலரையும் தாக்கி, அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். 

நள்ளிரவு 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றதால், அங்கு பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. என்றபோதும், ஜனவரி நடுப்பகுதி வரை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த இந்த கேளிக்கை நிலையம், எரியூட்டப்பட்டமை அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தினையும், ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 

Mantes-la-Jolie  நகர முதல்வர் தனது கண்டனத்தை வெளியிட்டார். சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.