Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

27 ஆனி 2018 புதன் 18:33 | பார்வைகள் : 18283


இத்தொடரின் பதினேழாவது நாளில், இன்று Batignolles-Monceau என அழைக்கப்படும், 17 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம். 
 
இந்த வட்டாரத்தின் மொத்த பரப்பளவு, 5.66 சதுர கிலோமீட்டர்கள். மற்றைய சில வட்டாரங்கள் போலவே இதுவும் நான்கு பிரிவுகளை கொண்டது. 
 
இந்த வட்டாரத்தில் அதிகளவான மக்கள் வசித்ததாக 1958 ஆம் ஆண்டு பதிவானது. அந்த வருடத்தில் 231,987 மக்கள் வசித்தனர். ஆனால் தற்போது நகர விரிவாக்கலைத் தொடர்ந்து 160,000 மக்கள் மாத்திரமே வசிக்கின்றனர். 
 
வட்டாரத்தின் தென் மேற்கு பகுதியில் அதிகளவான கட்டிடங்களும், அலுவலகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் அணிவகுத்துள்ளன. அதன் எதிர் திசையில் மக்கள் வசிக்கும் குடிமனைகள் உள்ளன. 
 
பிரபல இணையத்தளமான  Dailymotion நிறுவனத்தின் பரிஸ் தலைமையகமும் இங்கு, mmeuble Horizons இல் தான் உள்ளது. 
 
சுவாதீஷ் மக்களின் சர்வதேத பாடசாலையான Svenska Skolan, இங்கு தான் உண்டு. 
 
ஓவியர் Jean-Jacques Henner இன் ஓவியங்கள் அடங்கிய அருங்காட்கியகமான Musée national Jean-Jacques Henner கூட இங்கு தான் உண்டு. 
 
பல்வேறு கடைகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள் என இந்த வட்டாரத்தின் அனைத்து தேவைகளையும் இங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை இந்த வட்டாரம் கொண்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்