விலகிய ‛விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் புதிய படங்கள்!
1 தை 2025 புதன் 10:11 | பார்வைகள் : 304
அஜித் நடித்து வந்த, 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறுவதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த நிலையில், தற்போது இரண்டு புதிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுவாகவே தீபாவளி, பொங்கல், நியூ இயர் போன்ற விசேஷ நாட்களை குறிவைத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட அஞ்சுவார்கள். காரணம் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் அலையில் சிக்கி, வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கவனிக்கப்படாமல் போய்விடும் என்பதால்.
ஆனால் ஒரு சில படங்கள், இது போன்ற அலைகளைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் கவனிக்க கவனிக்கப்படுகிறது. பொங்கல் ரிலீஸ் ஆக விடாமுயற்சி வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியான பின்னர், இதற்கு போட்டியாக வணங்கான், வீர தீர சூரன், மற்றும் இயக்குனர் ஷங்கரின் பான் இந்தியா படமான 'கேம் சேஞ்சர்'. மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் ரிலீஸ் இருந்து வெளியேறுவதாகவும் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லைக்கா நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்ததி இருந்தாலும், சில வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வழிவகுத்துள்ளது.