Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவுக்கு படகுப் பயணம்! - 25% சதவீதம் அதிகரிப்பு! - பலி எண்ணிக்கையும் அதிகம்!!

பிரித்தானியாவுக்கு படகுப் பயணம்! - 25% சதவீதம் அதிகரிப்பு! - பலி எண்ணிக்கையும் அதிகம்!!

1 தை 2025 புதன் 12:46 | பார்வைகள் : 870


முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில், சென்ற 2024 ஆம் ஆண்டு அதிகளவான அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்துள்ளனர்.

கடந்த வருடத்தில் மொத்தமாக 36,816 அகதிகள் பிரித்தானியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாக சென்றடைந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 25% சதவீதத்தால் அதிகமாகும்.  எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையை விட இது குறைவாகும். அவ்வருடத்தில் 45,774 அகதிகள் பயணித்திருந்தனர்.

டிசம்பர் 2024 இல் மட்டும் 3,200 அகதிகள் கரையைக் கடந்துள்ளனர். அகதிகளில் பெரும்பான்மையானோர் ஆஃப்கானிஸ்தான், ஈரான், சிரியா மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 76 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.