Paristamil Navigation Paristamil advert login

  உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகம் செய்த ரஷ்யா 

  உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகம் செய்த ரஷ்யா 

1 தை 2025 புதன் 14:40 | பார்வைகள் : 13070


ஐரோப்பிய எரிவாயு சந்தையில் ஒரு காலத்தில் கோலோச்சிய ரஷ்யா தற்போது தனது வலிமையான பிடியை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தற்போதைய 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமானது டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் காலாவதியாகிறது. 

இந்த ஒப்பந்தம் தொடர்பில் புதிய பேச்சுவார்த்தைகளுக்கு உக்ரைன் மறுத்துள்ளது.

ரஷ்யாவும் சோவியத் ஒன்றியமும் ஐரோப்பிய எரிவாயு சந்தையில் பெரும் பங்கைக் கட்டியெழுப்ப அரை நூற்றாண்டுகளுக்கு மேலானது.

இதன் பலனாக 35 சதவிகிதம் அளவுக்கு சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

ஆனால் உக்ரைன் உடனான போர் அந்த வணிகத்தை மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பங்கினை தற்போது நோர்வே, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.

ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட சரிவு, எரிவாயு விலையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தியது. 

பணவீக்கத்தைத் தூண்டியதுடன், ஐரோப்பா முழுவதும் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியது.

2023ல் உக்ரைன் வழியாக சுமார் 15 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை ரஷ்யா ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது. 2023ல் மட்டும் ரஷ்யாவின் Gazprom நிறுவனம் சுமார் 7 பில்லியன் டொலர் இழப்பை பதிவு செய்துள்ளது.

1999க்கு பின்னர் Gazprom பதிவு செய்யும் முதல் இழப்பு இதுவென்றே கூறப்படுகிறது. ஆனால் உக்ரைனுடன் இந்த விவகாரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க கால அவகாசம் இல்லை என்றே விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்