Paristamil Navigation Paristamil advert login

எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்!

எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலோன் மஸ்க்!

1 தை 2025 புதன் 14:48 | பார்வைகள் : 161


உலகின் முன்னணி பில்லியனரான எலோன் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் தனது பெயரை செவ்வாயன்று (டிசம்பர் 31) “கெகியஸ் மாக்சிமஸ்” என்று மாற்றியமைத்துள்ளதுடன், சுயவிவரப் படத்தையும் புதுப்பித்துள்ளார்.

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டுவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலோன் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

டுவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலோன் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் அவர், தனது எக்ஸ் ஐடியின் பெயரை ‘கெகியஸ் மாக்சிமஸ்’ என்று மாற்றம் செய்துள்ளார்.

மேலும் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றி, பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்துள்ளார்.

தீவிர வலதுசாரி குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு நினைவுச்சின்னமான பெப்பே த ஃபிராக் என்ற கதாபாத்திரத்தை சித்தரிக்கும் அவரது புதிய சுயவிவரப் படத்திற்கான உடனடி விளக்கத்தை அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரான எலோன் மஸ்க் வெளியிடவில்லை.

அதே சமயம் இந்த மாற்றத்திற்கு பிறகு கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது.

இணையத்தில் வைரலாக மீம்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் மீம் நாணயங்கள் மின்னியல் வகையை சார்ந்தது ஆகும்.

2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகனின் பெயர் மாக்சிமஸ் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்