Paristamil Navigation Paristamil advert login

இந்த 2024-ல் காதலர்களிடையே இருந்த பிரபலமான டேட்டிங் வார்த்தைகளும்.. அவற்றின் அர்த்தங்களும்...

இந்த 2024-ல் காதலர்களிடையே இருந்த பிரபலமான டேட்டிங் வார்த்தைகளும்.. அவற்றின் அர்த்தங்களும்...

1 தை 2025 புதன் 14:56 | பார்வைகள் : 266


2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டில் பலவிதமான புதிய விஷயங்கள் ட்ரெண்ட்டாக இருந்தன. அதுவும் உறவுகள் மற்றும் காதலை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டில் இன்னும் பலருக்கும் தெரியாத பல வார்த்தைகள் காதலிப்பவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன.முந்தைய காலத்தில் காதலிக்கும் போது காதலர்களிடையே பயன்படுத்தப்பட்டு வந்த வார்த்தைகள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக இருந்தன. ஆனால் தற்போதைய தலைமுறையினர் டேட்டிங் அல்லது காதலிக்கும் போது பயன்படுத்தும் பல வார்த்தைகள் புரியாதவாறு உள்ளன.

இப்போது 2024 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டேட்டிங் வார்தைகளையும், அவற்றின் அர்த்தங்களையும் காண்போம். நீங்கள் இன்னும் அப்டேட் ஆகாமல் இருந்தால், உடனே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாம்பியிங்
தற்போதைய காதல் உலகில் ஜாம்பியிங் என்ற வார்த்தை பிரபலமாக உள்ளது. இந்த வார்த்தையானது ஜாம்பி என்ற வார்த்தையில் இருந்து வந்தது. ஜாம்பி என்பது மரணத்திற்கு பின் திடீரென்று உயிருடன் வரும் ஒரு பேய் கதாப்பாத்திரம் ஆகும். ஆனால் ஒரு உறவில் ஜாம்பியிங் என்பது ஒருவருடன் டேட்டிங்கில் இருக்கும் போது திடீரென்று தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டு, பின் திடீரென்று மீண்டும் வந்து உங்களுடன் முடிந்தவரை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகும்.

கோஸ்டிங்
கோஸ்டிங் என்பது ஜாம்பியிங்கைப் போன்றது தான். ஆயினும், இதில் டேட்டிங் செய்து கொண்டிருக்கும் போதே ஒருவர் எந்த விளக்கமும் கொடுக்காமல் முற்றிலும் உறவை முடித்துக் கொள்வதாகும். இந்த வார்த்தையும் 2024-ல் காதலிப்பவர்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்.

பிரட்க்ரம்பிங்
பிரட்க்ரம்பிங் என்பது ஒரு காதலிக்காமல் உறவில் இருப்பதைக் குறிக்கிறது. அதாவது ஒருவர் மற்றவரை காதலிக்கமாட்டார். ஆனால் நன்கு பேசுவார், உல்லாசமாக இருப்பார். இந்த வார்த்தையும் 2024-ல் உறவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

பாக்கெட்டிங்
பாக்ட்டிங் என்பது ஒருவர் தனியாக இருக்கும் போது, அந்நபரின் காதலன் அல்லது காதலியைப் போன்று நடந்து கொள்வார். ஆனால் மற்றவர்களுக்கு முன், உங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார். அதாவது காதலிப்பதை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வாழ்வார்கள்.

டெக்ஸ்ட்லேசன்சிப்
டெக்ஸ்ட்லேசன்சிப் என்பது நேருக்கு நேர் சந்தித்து பழகாமல், சமூக ஊடகங்களின் வழியாக வெறும் சாட்டிங் மூலமாக உறவில் இருப்பதைக் குறிக்கிறது. இதை காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவரை சாட்டிங் மூலமாக பேசுவார்கள். நேரில் இருவருக்கும் பொருந்தாமல் இருக்கும். இத்தகைய உறவுகள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலம் உருவாகின்றன.

டெலிகேட் டம்பிங்
டெலிகேட் டம்பிங் என்பது காதலித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருவர் அந்த காதலில் நாட்டம் குறைந்ததால், அதை முறிக்க, தன்னை ஒரு நல்லவர் போன்று வெளிக்காட்டி உறவை முறித்துக் கொள்வதைக் குறிக்கிறது.

பப்பிங்
பப்பிங் என்பது ஒருவர் தன் எதிரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அவரைப் புறக்கணித்து போனில் அதிக கவனம் செலுத்துவரைக் குறிக்கிறது. இந்த வார்த்தை ஃபோன் மற்றும் ஸ்னப்பிங் ஆகிய வார்த்தைகளால் ஆனது.

ஃப்ரீக் மேட்சிங்
ஃப்ரீக் மேட்சிங் என்பது ஒருவது தங்கள் பழக்கவழக்கங்களைப் போன்றே தனது கூட்டாளரைக் கண்டுபிடிக்கும் ஒரு முறையாகும். அதாவது ஒருவர் தனது வாழ்க்கையில் தனது ஒவ்வொரு விருப்பத்தையும் புரிந்து கொண்டு, உங்கள் ஆசைகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்று, உங்கள் கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு உறுதுணையாக இருந்து முன்னேற உதவுவார்.