Paristamil Navigation Paristamil advert login

என்று என்னை சேர்வாயோ மானே

என்று என்னை சேர்வாயோ மானே

1 தை 2025 புதன் 15:03 | பார்வைகள் : 361


ப்ரியமானவளே...


உனக்குள் வளர்ந்த காதலை நீ
சொல்லாமலே சென்றுவிட்டாய்...

நீ அருகில் இருக்கும் போது
நானும் உணரவில்லை...

உன் பார்வையும்
உன் மொழிகளையும்...

யாரோ சொல்லி
உணர்ந்துகொண்டேன்...

காதலையும் உணர்வுகளையும்
நீயே வளர்த்துக்கொண்டு...

சொல்லாமல் சென்றால்
நான் எப்படி உணர்வேன்...

உன்
நினைவுகள் தொடர்கிறது...

எதாவது ஒரு
வகையில் என்னை...

உன் விழிகளை மீண்டும்
நான் பார்க்கும்வரை...

புன்னகைக்கும் என்
உதடுகள் பொய்யாக...

உன்னை கண்டால் என்
விழிகள் மகிழ்ச்சி அடையும்...

ஒரு துளி
கண்ணீருடன்...

வெளியேறும் கண்ணீருக்கு
தெரியாமல் இருக்கலாம்...

மனதிற்கு தெரியும் உன்னை
காணாமல் துடிக்கும் வலி...

என் உணர்வும் இதயமும்
உனக்காக காத்திருக்கும்...

மயிலிறகாய் உன் நினைவுகள்
என்னை வருடும் போதெல்லாம்...

என்னை
நான் மறக்கிறேன்...

என்று என்னை
சேர்வாயோ என் உயிரே.....

எழுத்துரு விளம்பரங்கள்