மீன்களிலே எது ரொம்ப பிரபலம் தெரியுமா?
1 தை 2025 புதன் 15:06 | பார்வைகள் : 360
நண்பன் 1: மீன்களிலே எது ரொம்ப பிரபலம் தெரியுமா?
நண்பன் 2: ??
நண்பன் 1: "நட்சத்திர மீன்"
நண்பன் 1: உயரத்தில் இருந்து விழுந்தாலும் இதுக்கு மட்டும் பேன்டேஜ் தேவைப்படுவதில்லை தெரியுமா?
நண்பன் 2: ??
நண்பன் 1: "மழைத்துளி "
நண்பன் 1: எது ரொம்ப சின்ன மாதம் தெரியுமா?
நண்பன் 2: பிப்ரவரி
நண்பன் 1: இல்ல,"மே"
உனக்கு தெரியுமா இந்த பிரபலங்கள் ஏன் எப்பவும் கூல் ஆக இருக்காங்க ?
ஏன்?
அவர்களை சுற்றி எப்பவும் "ஃபேன்ஸ்" இருப்பதனால்
தம்பி: இது என்னடா.. கரெண்ட் போன பிறகும் ஃபேன் சுத்துது..
அண்ணன் : கொஞ்சம் அமைதியா இருடா.. ஃபேன்க்கு கரெண்ட் போயிருச்சுனு தெரியாது
நரகத்தில் எமனிடம்.. ஒருவன்
அய்யா என் மனைவிக்கு ஒரு போன் பேச தர முடியுமா?
பேசிய முடித்தபின்..
எவ்வளவு ஆச்சு?
எமன்: நரகம் டூ நரகம் ஃப்ரீ தான்..
நண்பன் 1: டேய்.. இனிமேல் பூமியை காப்பாத்தற எல்லா வேலையும் செய்ய போறேண்டா..
நண்பன் 2: ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா திடீர்ன்னு எப்படி உனக்கு அறிவு வந்துச்சு !
நண்பன் 1: பூமியை தவிர வேற எங்கயும் பொண்ணுங்களே இல்லையாம்..
நண்பன் 1: என் மனைவி சூப்பரா சமைப்பா தெரியுமா?
நண்பன் 2: அப்படியா.. என்னவெல்லாம் சமைப்பாங்க..
நண்பனின் மனைவி: ஆமா.. நான் சூப்பரா பண்ணி தருவேன்..
நண்பன் 2: அச்சச்சோ.. நான் பன்னியெல்லாம் சாப்பிடறது இல்லைம்மா..