பரிஸ் : புதுவருட இரவில் 136 பேர் கைது!!
1 தை 2025 புதன் 15:24 | பார்வைகள் : 1669
புதுவருட வரவேற்பு நிகழ்வின் போது, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பரிசில் 136 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் இரண்டு மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக மொத்தமாக 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சிறிய மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இரண்டு மகிழுந்துகள் எரியூட்டப்பட்ட நிலையில், எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தாண்டு நிகழ்வுகளின் பாதுகாப்புக்காக 10,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.