Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட மாற்றம்

1 தை 2025 புதன் 16:38 | பார்வைகள் : 4086


இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக தீபால் பெரேரா தெரிவித்தார். 

ஆட்டிசம் மட்டுமின்றி புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்தார். 

எனவே தற்போதைய சூழ்நிலையில் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்