Paristamil Navigation Paristamil advert login

▶ காற்று.. மழை பனிப்பொழிவு.. சீரற்ற காலநிலை!!

▶ காற்று.. மழை பனிப்பொழிவு.. சீரற்ற காலநிலை!!

2 தை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 2703


வேகமாக காற்று, பனிப்பொழிவு மழை போன்ற சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஜனவரி 2 ஆம் திகதி, நாட்டின் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mont Blanc இன் வடக்கு நகரான Chamonix இல் இன்று -7℃ எனும் கடும் குளிர் நிலவும் எனவும், Reims நகரில் 3°C குளிரும், Metz நகரில் 4℃ குளிரும், Chaumont நகரில் 5℃ குளிரும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,

Ardennes, Doubs, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Vosges, Territoire de Belfort, Côte-d'Or, Aisne, Nord, Pas-de-Calais, Somme, Oise, Seine-Maritime மற்றும் Eure ஆகிய மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,

Aube; Doubs; Eure-et-Loir; Isère; Loire; Loire-Atlantique; Loiret; Marne; Meuse; Morbihan; Puy-de-Dôme; Haut-Rhin; Haute-Saône; Haute-Savoie; Allier; Ardennes; Paris; Seine-et-Marne; Yvelines; Vosges; Yonne; Territoire de Belfort; Essonne; Hauts-de-Seine; Seine-Saint-Denis; Val-de-Marne; Val-d'Oise மாவட்டங்களில் இன்று வேகமான காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் பரிஸ் மற்றும் புறநகர்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.