Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

22 ஆனி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18267


பரிசில் 14 ஆம் வட்டாரம் எப்போதும் 'ஸ்பெஷல்' தான்...! அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!! 
 
பதின்நான்காம் வட்டாரத்துக்கு மற்றொரு பெயரும் உண்டு. Observatoire!! 
 
பரிசில் ஈபிள் கோபுரத்துக்கு அடுத்தபடியான உயரமான கட்டிடமாக கருதப்படும்  Tour  Montparnasse கட்டிடம் இங்கு தான் உண்டு.  பரிசில் உள்ள மிக பிஸியான தொடரூந்து நிலையங்களில் ஒன்றான, Gare Montparnasse தொடரூந்து நிலையமும் இங்கு தான் உள்ளது. 
 
Cité Internationale Universitaire de Paris பல்கலைக்கழகம் இங்கு தான் உள்ளது. 6000 மாணவர்கள் வரை இங்கு கல்வி கற்கின்றனர். 
 
5.62 சதுர கிலோமீட்டர்கள் (1389 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்ட இந்த வட்டாரத்தில், நிரந்தர குடியேற்றவாதிகள் 1,32,000 பேர் வசிக்கின்றனர். 70 ஆயிரத்துக்கும் மேலானோர் தொழிலுக்காக இங்கு வசிக்கின்றனர். 1954 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்த எண்ணிக்கையின் படி, இங்கு 185,000 பேர் வசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விமான நிலையங்களின் தலைமை அலுவலகமான Aéroports de Paris அலுவலகம் 14 ஆம் வட்டாரத்தில் தான் உள்ளது. இங்கு ஒரு சிறைச்சாலை கூட உள்ளது... உள்துறை அமைச்சால் நிர்வாகிக்கப்படும் La Santé Prison சிறைச்சாலை தான் அது. இங்கு 2000 கைதிகள் வரை சிறைவைக்கப்பட்டுள்ளனர். 
 
மண்டையோடுகள் மற்றும் எலும்புகளை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நில கீழ் அருங்கட்கியகமான Catacombes de Paris கூட இங்கு தன் உண்டு. 
 
மொத்தத்தில் இந்த 14 ஆம் வட்டாரம்... எப்போதும் ஆச்சரியம்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்