Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

21 ஆனி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18798


இன்றைய பதின்மூன்றாவது நாள் தொடரில், Gobelins என அழைக்கப்படும் 13 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!

பதின்மூன்றாம் வட்டாரம் பிரெஞ்சு மக்களுக்கானது மட்டுமல்ல... இங்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக ஆசியாவினர்..!!

பல்வேறு தரப்பு மக்கள் வசிப்பதால், வட்டரமும் மிக பெரிய வட்டாராமாகத்தான் உள்ளது. 7.15 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது இந்த வட்டரம்.

பிரான்சின் தேசிய நூலகமான Bibliothèque nationale de France, இங்குதான் உள்ளது. தவிர புதிதாக உருவாக்கப்பட்ட வியாபார கட்டிடத்தொகுதியான Paris Rive Gauche கூட இங்குதான் உண்டு!

1970 - 1980 களில் வியட்னாமைச் சேர்ந்த அகதிகள் இங்கு குடியேறினார்கள். இன்று அவர்களுக்கென ஒரு தனி பிராந்தியமே இங்கு உண்டு. இது தவிர, சீனா, கம்போடியா போன்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்களும் இங்கு வசிக்கின்றனர். தவிர Teochew மொழி உட்பட பலமொழி பேசுபவர்கள் இங்கு வசிக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டில் 170,000 மக்கள் இங்கு வசித்தனர். புதிய தொழிலகங்கள், தொழில் பேட்டைகள் இங்கு படையெடுத்ததன் பின்பு குடியேற்றங்கள் மேலும் அதிகரித்தன.

AccorHotels குழுமத்துக்கு சொந்தமான மிகப்பெரும் அரங்கு ஒன்று இங்கு உள்ளது. அதில பல நிகழ்ச்சிகள் அவ்வப்போது இடம்பெற்று, இரசிகர்கள் வருகையை நிரந்தரமாக தக்க வைத்துள்ளது.  தவிர, 13 ஆம் வட்டாரத்தில் பல 'தொழில்நுட்பவியலாளர்' படிப்பு தொடர்பான கல்லூரிகளும் குவிந்து உள்ளன.

பரிசின் ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz கூட இங்கு தான் உள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்