கனடாவில் பறவை காய்ச்சலில் இருந்து குணமாகிய சிறுமி - மருத்துவர்கள் அறிவிப்பு
2 தை 2025 வியாழன் 14:35 | பார்வைகள் : 622
கனடாவில் பறவை காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நோய் தொற்று தாக்கம் குணமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பறவைக்காச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்க் குறிகளினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் நோய் பரவியிருந்தமை தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு நோய் தொற்றுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது இந்த சிறுமியின் உடல் தேறி வருவதாகவும் நோய்த்தொற்று நீங்கி உள்ளதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.