Aulnay-sous-Bois : வீதி விபத்தில் காவல்துறை வீரர் காயம்!!
2 தை 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 1651
காவல்துறை வீரர் ஒருவர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீரர், மேலும் மூன்று காவல்துறையினருன் இணைந்து குற்றவாளிகள் சிலரை துரத்திக்கொண்டு சென்றனர். அதன் போது காவல்துறையினரின் மகிழுந்து மற்றொரு வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் காவல்துறையினரின் மகிழுந்து தூக்கி வீசப்பட்டு பல தடவைகள் சுழன்று சென்று நொருங்கியது. இதில் காவல்துறையினர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.