இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

18 ஆனி 2018 திங்கள் 19:30 | பார்வைகள் : 20711
Reuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...
6.38 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட 12 ஆம் வட்டாரத்தின் ஒரு பகுதியை முழுவதுமாக சென் நதி பிடித்து வைத்துள்ளது. பரிஸ் நகர மக்களில் நீண்ட சென் நதிக்கரையை அனுபவிப்பது இவர்கள் தான்.
பரிசில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய ஒபேரா கட்டிடமான Opéra Bastille இங்கு தான் உள்ளது.
Bercy நகரம், பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் ஆகும். இந்த நகரத்துடன் சேர்த்து மொத்தம் 112,336 மக்கள் 12 ஆம் வட்டாரத்தில் வசிக்கின்றார்கள்.
31 நாடுகளில் நிலைகொண்டிருக்கும் பிரபல மீள் சுழற்சி நிறுவனமான Derichebourg நிறுவனத்தின் பரிஸ் கிளை இங்குதான் உள்ளது.
பன்னிரெண்டாம் வட்டாரத்தில் பல பூங்காக்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமாக Jardin du port de l'Arsenal பூங்கா குறிப்பிடத்தக்கது.
இது தவிர, பரிசின் மிகப்பெரிய கல்லறைத்தோட்டமான Picpus கல்லறைத் தோட்டமும் இங்கு தான் உள்ளது. பிரான்சின் மிக பிரபலமான Baron Rouge மதுபான விடுதியும் இங்குதான் உள்ளது.
பரிஸ் 12 ஆம் வட்டாரம் எப்போதும் வியாபார நோக்கில் தான் இயங்கும். பெரும் பணக்கார நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் இங்கு நிறைந்துள்ள பிஸியான வட்டாரம்...!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025