பெரும் ஆழுமைகளுடன் இன்று l'Élysée மாளிகையில் அமைச்சர்கள் சந்திப்பு.
3 தை 2025 வெள்ளி 07:28 | பார்வைகள் : 1577
அரசுத்தலைவர் Emmanuel Macron இதுவரையான தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஆறாவது தடவையாக புதிய அமைச்சரவையை அரசுத்தலைவர் மாளிகையான l'Élysée இன்று (03/01/2025) சந்திக்கிறார். இது ஐந்தாவது குடியரசில் இதுவரை நடைபெறாத ஒன்று என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இம்முறை அமைக்கப்பட்ட அமைச்சரவையில் என்றும் இல்லாதவாறு முன்னாள் பிரதமர்களான Élisabeth Born, Manuel Valls போன்றவர்கள் அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட உள்ளனர்.
François Bayrou அவர்களின் தலைமையிலான அரசு எதிர்கட்சிகளுடன் பல விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசும் Michel Bernier தலைமையிலான அரசைப் போல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
1962 க்கு பின்னர் அரசுத்தலைவர் Emmanuel Macron தலைமையிலான அரசே ஆட்ச்சிக் கவிழ்ப்பை சந்தித்த அரசாக உள்ளது. ஏற்கனவே அரசுத்தலைவர் தனது தவறான முடிவுகளுக்காக பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என வலுவான குரல்கள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய அரசை முடிந்தவரை கவனமாக கையாள வேண்டிய, காப்பாற்ற வேண்டிய நிலைமை அரச தலைவருக்கு ஏற்பட்டுள்ளது.