Paristamil Navigation Paristamil advert login

pont d'Iéna மேம்பாலத்தின் கீழ் சடலம் மீட்பு!!

pont d'Iéna மேம்பாலத்தின் கீழ் சடலம் மீட்பு!!

3 தை 2025 வெள்ளி 11:54 | பார்வைகள் : 1131


லீனா மேம்பாலத்தின் (pont d'Iéna) கீழே ஆற்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 16 ஆம் வட்டாரத்தின் pont d'Iéna பாலத்தின் கீழே இருந்து குறித்த சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்தவர் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனைகளுப் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.