Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

16 ஆனி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18716


இன்றைய பதினோராவது நாள் தொடரில், பரிசில் மிக அதிகமான சனத்தொகை நிறைந்த பதினோராம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!! 
 
பதினோராம் வட்டாரத்துக்கு இன்னுமொரு பெயர் உண்டு. Popincourt!! 
 
ஐரோப்பாவில் அதிகம் சனத்தொகை கொண்ட மிக நெருக்கமான நகரங்களில் இதுவும் ஒன்று. 3.67 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட இந்த வட்டரத்தில் 1,52,000 பேர் வசிக்கின்றனர். அதாவது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 41 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 
 
இதே வட்டரத்தில் அதிகபட்ச சனத்தொகையாக 1911 ஆம் ஆண்டு 242,295 பேர் வசித்ததாக தரவுகள் சொல்கின்றன. 
 
தவிர, பரிசின் மற்றைய வட்டாரங்ககை விடவும், பதினோராம் வட்டாரத்தில் அல்வேறு மதங்ககைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இதனாலேயே தேவாலயங்களும், பள்ளிவாசல்களும்... இன்னும் பல வழிபாட்டுத்தலங்களும் நிறைந்துள்ளன. 
 
Cirque d'hiver அரங்கு இங்கு மிக பிரபலம்... சர்கஸ் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள் என எப்போதும் 'பிஸி' இந்த அரங்கு...
 
1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, 68 மீட்டர்கள் உயரம் கொண்ட மிகப்பெரும் தேவாலயமான Saint-Ambroise தேவாலயம் இங்குதான் உள்ளது. 
 
பிரெஞ்சுப் பெண் பாடகி, Édith Piaf ஐ நினைவூட்டும் வகையில், Musée Édith Piaf எனும் ஒரு அருங்காட்சியகமும் இங்கு உள்ளது. 
 
நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல் பரிசின் இப்பகுதியில் தான் இடம்பெற்றது. அது இந்த வட்டாரத்துகும் பரிசுக்கும் ஆறா வடு!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்