Paristamil Navigation Paristamil advert login

ஜனவரி 3 ஆம் திகதியில் - பிரெஞ்சு மக்கள் பலர் இறக்கும் அபூர்வ நிகழ்வு!

ஜனவரி 3 ஆம் திகதியில் - பிரெஞ்சு மக்கள் பலர் இறக்கும் அபூர்வ நிகழ்வு!

3 தை 2025 வெள்ளி 17:38 | பார்வைகள் : 2632


பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3 ஆம் திகதி அன்று மட்டும் வழமைக்கு அதிகமானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20 வருடங்களாக பதிவான தரவுகளின் படி, பிரான்சில் ஒவ்வொரு ஜனவரி மாதத்தின் 3 ஆம் திகதியிலும் வழமைக்கு அதிகமானவர்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1,600 பேர் சராசரியாக இறப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜனவரி 3 ஆம் திகதிகளில் மட்டும் 1,900 அல்லது 2,100 பேர் வரை இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறப்பு இறப்பு வீதம் தொடர்பில் INSEE நிறுவனம் மேற்கொண்டிருந்த ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த இந்த நாளில் மட்டும் என்ன நடக்கிறது  என தெரியவில்லை எனவும், இந்த மரணங்கள் தொடர்பில் எவ்வித மூடநம்பிக்கைகளோ, விஞ்ஞான ரீதியாகவோ எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.