இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
14 ஆனி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18328
பத்தாவது நாள் தொடரில் பரிஸ் பத்தாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...
பத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..?? கார்-து-நோர் தொடரூந்து நிலையம்..??
பிரான்சின் மிக முக்கியமான ஆறு தொடரூந்து நிலையங்கள் இங்கு தான் உள்ளது. அதில் இரண்டு நிலையங்கள் ஐரோப்பாவிலேயே மிக பழமையானதும், 'பிஸி'யான நிலையமும் ஆகும். ஒன்று கார்-து-நோர் மற்றையது Gare de l'Est!! இவை குறித்த அனேகமான தகவல்கள் பிரெஞ்சு புதினத்தில் அவ்வப்போது படித்திருப்பீர்கள்...!!
பத்தாம் வட்டாரத்துக்கு 'Entrepôt' என இன்னொரு பெயரும் உண்டு. இதன் மொத்த பரப்பளவு 715 ஏக்கர்கள்... அதாவது, 2.89 சதுர கிலோமீட்டர்கள்.
பத்தாம் வட்டாரத்துக்கு நான்கு பிரிவுகள் உண்டு.
Saint-Vincent-de-Paul,
Porte-Saint-Denis,
Porte-Saint-Martin,
Hôpital-Saint-Louis
என்ற இந்த நான்கு பிரிவுகளையும் கொண்டுள்ளது.
1881 ஆம் ஆண்டில் இங்கு 159,809 எனும் அதிகூடிய மக்கள் தொகையினர் வசித்தனர். இன்று 70 ஆயிரத்துக்குட்பட்டவர்கள் நிரந்த குடியேற்றவாதிகளாகவும், 71 ஆயிரம் வேலைகளுக்காக இங்கு வசிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
பரிஸ் பத்தாம் வட்டாரத்தை 'La Petite Turquie" (சிறிய துருக்கி) எனவும் ஒரு பெயர் கொண்டு அழைப்பார்கள். துரிக்கிய பூர்வீக மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றமையே காரணம்.
ஒன்பதாம் வட்டாரத்தையும் பத்தாம் வட்டாரத்தையும் இணைக்கும் Rue d'Abbeville வீதி, இங்குள்ள மிக புகழ்பெற்ற வீதியாகும்.
பரிசில் உள்ள மிக பிஸியான, எப்போதும் மக்கள் தொகை நிரம்பி வழியும் ஒரு வட்டாரமாக பத்தாம் வட்டாரம் உள்ளது!