Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : தொடருந்து மோதி ஒருவர் பலி!

Val-d'Oise : தொடருந்து மோதி ஒருவர் பலி!

3 தை 2025 வெள்ளி 20:08 | பார்வைகள் : 1389


தொடருந்து கடவையில் வீதியை கடக்க முற்பட்ட ஒருவரை தொடருந்து மோதியுள்ளது. இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

Val-d'Oise மாவட்டத்தில் உள்ள Deuil-Montmagny தொடருந்து கடவையில் இச்சம்பவம் இன்று ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை பதிவாகியுய்ள்ளது. நாற்பது வயதுடைய ஒருவர் காலை 9.15 மணி அளவில் குறித்த தொடருந்து கடவையை கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த தொடருந்து, அவரை மோதி தள்ளி தூக்கி வீசியது.

தொடந்து பயணிக்க இருந்ததை அடுத்து வீதியில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி அவர் கடவையை கடக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டது.