போதைப் பொருட்களுக்கு எதிரான போர் பிரான்சில் ஆரம்பம்.
4 தை 2025 சனி 07:52 | பார்வைகள் : 1627
கடந்த டிசம்பர் 30 திகதி அன்று Le Havre துறைமுகத்தில் ஒரு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு டன்களுக்கும் அதிகமான கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நடவடிக்கையை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Bruno Retailleau "போதைப் பொருட்களுக்கு எதிரான போர் பிரான்சில் ஆரம்பம், அதிகாரிகளை வாழ்த்துகிறேன்" எனதெரிவித்துள்ளார்.
குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில்
22 வயதான கப்பல்துறை தொழிலாளி மற்றும் 41 வயதான
கொள்கலனை எடுத்துச் செல்ல இருந்த சாரதி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பாரிஸ் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கொள்கலன்களில் இரண்டு கொள்கலன்கள் ஒரே குறியீட்டை கொண்டிருந்ததை அறிந்துகொண்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கொள்கலன்களை திறந்து பார்த்த பொழுது ஒரு கொள்கலனில் இரண்டு டன்னுக்கும் அதிகமான கொக்காயின்
போதை பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்தே சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.