மர்மமான முறையில் காணாமல் போன தாயும் மகனும் - சடலமாக மீட்பு!!
4 தை 2025 சனி 10:45 | பார்வைகள் : 2348
மர்மமான முறையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1 ஆம் திகதி Chabeuil (Drôme) நகரில் வைத்து காணாமல் போன இருவரும், நேற்று வெள்ளிக்கிழமை 48 மணிநேரங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டனர். 48 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயதுமே காணாமல் போயிருந்தார்கள். அவர்கள் இறுதியாக மஞ்சள் நிற Peugeot 107 மகிழுந்தில் பயணித்ததை சிலர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் என்ன நடந்தது என அறிய முடியவில்லை எனவும், அவர்களது குடும்பத்தினர் காவல்துறையினரை அழைத்து காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அவர்களது மகிழுந்துக்குள் இறந்து கிடந்துள்ளனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் அவர்களது மரணத்துக்குரிய காரணங்களை தேடி வருகின்றனர்.