இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

10 ஆனி 2018 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 21002
இன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்.
எட்டாம் வட்டாரத்தின் ஒரு பகுதியை சென்நதி ஆக்கிரமித்துள்ளது. பரிசில் உள்ள வட்டாரங்களில், எட்டாம் வட்டாரத்தில் இருந்து நேரடியாக 1 ஆம், 2 ஆம், 7 ஆம், 9 ஆம், 16 ஆம், 17 ஆம், ஆகிய வட்டாரங்களுக்கு சடார் என செல்லலாம். அத்தனை எல்லைகளை கொண்டது இது.
இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. 'எலிசே!'... ஆம் ஜனாதிபதியின் எலிசே மாளிகை இங்கு தான் உண்டு.
3.81 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு. 959 ஹெக்டேயர்கள். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிகை 39,300 ஆகும்.
1891 ஆம் ஆண்டு பரிசிலேயே அதிக மக்கள் இங்கு தான் வசித்தனர். 107,485 பேர் இங்கு வசித்ததாகவும், 1999 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்து, தற்போதும் அதே அளவில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவிர, இங்கு AXA காப்பீடு நிறுவனத்தின் தலைமையகமும், பிரெஞ்சு மின்சார சபை (Électricité de France) தலைமையகமும் இங்கு உள்ளது. தவிர Air China நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு உள்ளது.
1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட Théâtre des Champs-Élysées - ஒபேரா திரையங்கமும் இங்குதான் உள்ளது.
இவை தவிர பல அரச அலுவலகங்களும், உணவகங்கள் விடுதிகள் என பல அடையாளங்கள் இங்கு அணி வகுத்து நிற்கின்றன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025