Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் மனநிலை - வெளியான அதிர்ச்சி அறிக்கை

இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் மனநிலை - வெளியான அதிர்ச்சி அறிக்கை

4 தை 2025 சனி 10:58 | பார்வைகள் : 1277


இஸ்ரேல் ராணுவ வீரர்களிடையே உயிரை மாய்த்து கொள்ளும் விகிதம் கடுமையாக அதிகரித்து இருப்பதை சமீபத்திய அறிக்கை வெளி காட்டியுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 38 பேர் வரை உயிரை மாய்த்து கொண்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 14 பேரும் 2021 ஆம் ஆண்டில் 11 பேரும் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடங்கிய பின்னர் 28 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் (IDF) மன நல பிரச்சினைகள் அதிகரித்து வருவதைக் குறிக்கும்  பரந்த போக்கை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில் மட்டும், போர், விபத்துக்கள் மற்றும் நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 558 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் சமீபத்திய காசா போர் நடவடிக்கை வீரர்களிடையே கடுமையான மன நல கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்