Paristamil Navigation Paristamil advert login

தென் கொரியாவில் 22 பேர்களுடன் விபத்தில் சிக்கிய மீன்பிடி படகு

தென் கொரியாவில் 22 பேர்களுடன் விபத்தில் சிக்கிய மீன்பிடி படகு

4 தை 2025 சனி 11:10 | பார்வைகள் : 1253


தென் கொரியாவில் 22 பேர்களுடன் பயணித்த மின்பிடி படகு ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் 22 பேர்களுடன் பயணித்த மீன்பிடி படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் 3 பேர் இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தென் ஜியோல்லா மாகாணத்தில் கேஜியோ தீவு அருகே மீன்பிடி படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதாக கடலோர காவல்படை மற்றும் பிற அதிகாரிகள் காலை 10:30 மணியளவில் தெரிவித்தனர்.

மேலும், மூன்று பேர்கள் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காணப்பட்டனர் என்றும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

எஞ்சிய 19 பேரும் கடலோர காவல்படை மற்றும் அருகில் இருந்த படகு மூலம் மீட்கப்பட்டனர், மேலும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உயிர் தப்புவதற்காக கடலில் குதித்ததாக நம்பப்படுகிறது. மீன்பிடி படகு விபத்தில் சிக்கியதற்கான காரணத்தை விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்,

மேலும் படகின் மாலுமி மரணத்தை விளைவிக்கும் தொழில்முறை அலட்சியம் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்படலாம் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மிக சமீபத்தில் தான் தென் கொரியாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது

எழுத்துரு விளம்பரங்கள்