அஜித் - தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா?
4 தை 2025 சனி 13:05 | பார்வைகள் : 248
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி இறுதியில் ’விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அஜித்தின் இன்னொரு படமான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகிய இந்த படம், ஏற்கனவே பொங்கல் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனுஷ் நடித்து இயக்கி வரும் ’இட்லி கடை’ என்ற திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், தமிழ் புத்தாண்டு திருநாளில் அஜித் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.