Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

8 ஆனி 2018 வெள்ளி 14:30 | பார்வைகள் : 19251


இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
 
பரிஸ் என்றதும் என்ன ஞாபகம் வருமோ, அது இந்த வட்டாரத்தில் தான் உள்ளது.  உலகில் அதிகம் சுற்றுலாப்பயணிகள் எங்கு செல்கின்றார்களோ... அந்த சுற்றுலாத்தலம் இங்கு தான் உள்ளது. ஈஃபிள்! ஏழாம் வட்டாரம்!!
 
ஏழாம் வட்டாரத்தில் பல எண்ணற்ற விஷயங்கள் அணிவகுத்து நின்கின்றன. முன்னதே சொன்னது போல் Champs de Mars இல் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரம் ஆகட்டும், நெப்போலியன் வளைவு ஆகட்டும், 'அடையாளம் தெரியாத மாவீரன்!' நினைவுத் தூபி ஆகட்டும்... எல்லாமே இங்கு தான் உள்ளது. வருடம் தோறும் இடம்பெறும் ஜூலை 14 நிகழ்வு எல்லாமே இங்கேதான்!
 
மொத்த மக்கள் தொகை 55,400. 1,010 ஏக்கர்கள். 1926 ஆம் ஆண்டு எடுக்கபட்டிருந்த கணக்கெடுப்பின் படி இரண்டு மடங்காக இங்கு மக்கள் வசித்தனர். 
 
தற்போது 55,400 பேர் வசித்தாலும், 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இங்கு பணி புரிகின்றார்கள். 
 
பிரதமர் வசிக்கும் Hôtel Matignon கட்டிடம் இங்கு தான் உள்ளது. இது தவிர, விவசாய அமைச்சகம், வெளிநாட்டு அமைச்சகம், தேசிய கல்வி அமைச்சகம் என பல அரச அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. 
 
1900 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இந்த வட்டாரத்தில் தான் இடம்பெற்றுள்ளது...
 
இன்னும் பல நூலகங்கள், அருங்காட்சியங்கள் என இங்கு குவிந்து உள்ளது. ஆச்சரியம் தான் இல்லையா...? 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்