▶ பனிப்பொழிவு : இல் து பிரான்சுக்குள் “niveau 2” எச்சரிக்கை!!
4 தை 2025 சனி 18:11 | பார்வைகள் : 4097
இன்று ஜனவரி 4 ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக “செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவை அடுத்து இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் “இரண்டாவது நிலை” (niveau 2) பாதுகாப்பு முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாலை 6 மணியின் பின்னர் வீதிகளில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 20 கி.மீ வேகத்தில் மட்டுமே பயணிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.
5 தொடக்கம் 7 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அதன் காரணமாக பரிசில் உள்ள அனைத்து பூங்காக்கள், புல்வெளிகள், கல்லறைகள் போன்றன மாலை 6 மணியுடன் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.