சோம்ப்ஸ்-எலிசே : வாடிக்கையாளர்களை வெளியே தள்ளி கடையை நிரந்தமாக மூடிய Fnac!!
5 தை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 4306
சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள பிரபல கடையான Fnac, தனது வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பி, கடையினை நிரந்தரமாக மூடியுள்ளது.
இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள், இசைத்தட்டுகள், இசைக்கருவிகள், புத்தகங்கள் என ஏராளமான பொருட்களை கொண்ட குறித்த Fnac காட்சியறையினை, நிரந்தரமாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அங்குள்ள அனைத்து பொருட்களையும் தள்ளுபடி விலையுடன் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அங்கு 50% சதவீதம் வரை விலைக்கழிவு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 3 ஆம் திகதி கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு கூடியது. கடைக்குள் ஏராளமான மக்கள் குவிந்ததுடன், கடைக்கு வெளியே 200 மீற்றருக்கும் அதிகமாக மக்கள் வரிசையில் நிற்கத்தொடங்கினர்.
அதை அடுத்து, கடை திறக்கட்ட ஒருமணிநேரத்திலேயே மீண்டும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட 3,000 பேர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு, கடையின் கதவினை மூடியுள்ளனர். பின்னர் Fnac நிறுவனத்தினர் கடை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்தனர்.
அதேவேளை, ஊழியர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.