Paristamil Navigation Paristamil advert login

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

5 தை 2025 ஞாயிறு 07:27 | பார்வைகள் : 942


நிமோனியா தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை  உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதான இந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 

இவர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு திடீரென உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அதன் பின்னர், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார். 

நிமோனியா தொற்று ஏற்பட்டதாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்