பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
5 தை 2025 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 566
பார்ப்பதற்கு நன்கு பிரகாசமான மற்றும் அழகான காயாக மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காயாகவும் இருக்கிறது பீட்ரூட். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிதான வழியை தேடுகிறீர்கள் என்றால் உங்கள் டயட்டில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கொள்வது சிறந்த வழியாகும். உங்கள் டயட்டில் பீட்ரூட் ஜூஸை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்...
பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன். மேலும் இந்த ஜூஸ் ஃபோலேட், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்டவற்றின் சிறந்த மூலமாகும். ஃபோலேட்டானது ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. அதேபோல் வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க முக்கியமானது. ரத்த சிவப்பணுக்கள் சரியாக வேலை செய்யவும், ரத்த சோகையை தடுக்கவும் இரும்புச்சத்து உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸால் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறனாகும். பீட்ரூட்டில் நிறைய நைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறும். இது ரத்த நாளங்களை தளர்த்த, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கலாம்
உடற்பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் mitochondria சிறப்பாக செயல்பட உதவுகின்றன. இது ஆற்றலை உற்பத்தி செய்யும் நமது செல்களின் பகுதிகளாகும். மேலும், பீட்ரூட் ஜூஸ் ஸ்டாமினவை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சிகளின்போது சோர்வின்றி செயல்பட உதவுகிறது. நீங்கள் ரன்னிங், சைக்கிளிங் அல்லது வெயிட் லிஃப்டிங் என எதை செய்தாலும் உடற்பயிற்சிகளுக்கு முன் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவது செயல்திறனை மேம்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பீட்ரூட் ஜூஸில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பீட்டாலைன்ஸ் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற உதவும். தவிர பீட்ரூட் ஜூஸ் கொழுப்புகளை ஜீரணிக்க செய்து, பித்த உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே, அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் குடிப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும்.
பீட்ரூட் ஜூஸில் செரிமானத்திற்கு முக்கியமான டயட்ரி ஃபைபர் உள்ளது. மேலும், இதிலிருக்கும் ஃபைபர் குடல் இயக்கங்களை சீராக வைப்பதோடு மலச்சிக்கலை தடுத்து நம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. தவிர பீட்ரூட்டில் குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கூறுகள் உள்ளன.
பீட்ரூட் போன்ற நைட்ரேட்ஸ் அதிகம் உள்ள உணவுகள் மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இது அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். அந்த வகையில் பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் முதியவர்களுக்கு இயல்பாக ஏற்படும் அறிவாற்றல் வீழ்ச்சி அபாயத்தைக் குறைக்கவும், மூளை செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் உதவும்.
பீட்ரூட் ஜூஸில் உள்ள பீட்டாலைன்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்து போராட மற்றும் உடலில் ஏற்படும் இன்ஃபளமேஷனை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட அழற்சியானது இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல அபாயங்களை ஏற்படுத்தும். எனவே பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடிப்பது, இன்ஃபளமேஷனை குறைக்க மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குறிப்பாக பீட்டாலைன்ஸ் சருமத்தில் வயதாவதற்கு எதிரான நன்மைகளை வழங்குகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை பீட்ரூட் ஜூஸ் அளிக்கிறது. இந்த ஜூஸில் இருக்கும் வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.
பீட்ரூட் ஜூஸில் கலோரி குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். எனவே, பீட்ரூட் ஜூஸை நீங்கள் குடித்தால் பல மணி நேரங்கள் வயிறு நிரம்பியதைபோல முழுமையாக உணர உதவும். தவிர பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மற்றும் கொழுப்பை கரைக்க உதவக்கூடும். குறிப்பாக, பசியைக் குறைப்பதன் மூலம் உங்கள் எடையை கட்டுப்படுத்த பீட்ரூட் ஜூஸ் உதவும். கூடுதல் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக பீட்ரூட் ஜூஸில் கேரட், ஆப்பிள் அல்லது இஞ்சி போன்றவற்றை சேர்க்கலாம்.-