Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

6 ஆனி 2018 புதன் 13:30 | பார்வைகள் : 18911


ஆச்சரியம் நிறைந்த ஆறாம் வட்டாரம், இன்றைய ஆறாவது நாள் தொடரில்...
 
2.15 சதுர கிலோமீட்டர்கள் ( பரப்பளவு கொண்ட இந்த  ஆறாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு... அதுதான் லக்ஸம்பேர்க்!! Luxembourg
 
இங்கு பல முக்கியமான வரலாற்றுத் தடையங்களும், அதன் பெருமைகளை பறைசாற்றும் கட்டிடங்களும் உண்டு. குறிப்பாகAbbey of Saint-Germain-des-Prés எனும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரும் தேவாலயம் இங்குத் ஆண்ட் உண்டு. 
 
ஆறாம் வட்டாரத்தில் இளவரசி Marie de' Medici ஒரு இடத்தை வாங்கி, மிகப்பெரும் மாளிகை ஒன்றை கட்டினார். 1615 ஆம் வருடத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது Palais du Luxembourg எனும் பெயரின் இன்றும் இயங்கி வருகிறது. 
 
1950 ஆம் ஆண்டில் இருந்து இங்கு மிக பிரபலமான கல்லூரிகள் இயங்கி வருகின்றது. தவிரே கஃபேக்கள் மிக முக்கியம்... பரிசில் உள்ள மிகச்சில பழமையான கஃபேக்களில் ஒன்றான Café de Flore இங்கு தான் உண்டு. வாழ்நாளில் ஒருதடவையேனும் மறக்காமல் சென்று வாருங்கள். பிரெஞ்சுத் திரைப்படமான Le feu follet இல் கூட இந்த கஃபே வரும்.
 
2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, 43,143 பேர் இங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர். 
 
உங்களுக்குத் தெரியுமா...? பரிசில் மிக அதிக மதிப்புள்ள வட்டாரம் இந்த ஆறாம் வட்டாரம் தான்...

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்