25 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் 'படையப்பா’ ?
5 தை 2025 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 706
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினியின் சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில், அந்த படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில், 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’படையப்பா’. இந்த படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தென்னிந்திய பிலிம் பேர் விருது மற்றும் தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றது.
’பாட்ஷா’விற்கு அடுத்து இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ள ’படையப்பா’, தற்போது மீண்டும் ரீரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் சினிமாவுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவேறும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'படையப்பா’ ரீரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரஜினி ரசிகர்கள் அந்த தேதியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.