மட்டக்களப்பில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

5 தை 2025 ஞாயிறு 12:12 | பார்வைகள் : 10527
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்நிலையில் வீழ்ந்து சனிக்கிழமை உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025