அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் கோஹ்லியின் நகைசுவை
5 தை 2025 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 524
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் விராட் கோஹ்லி தன்னிடம் Sandpaper இல்லை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 2வது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தபோது நடந்த நிகழ்வு வைரலாகியுள்ளது.
On-field ஆளுமைக்கு பெயர் பெற்ற விராட் கோஹ்லி, எப்போதும் ரசிகர்களுடன் பரபரப்பான உறவைக் கொண்டிருப்பார்.
அந்த வகையில் இப்போட்டியில் ஸ்மித் வெளியேறிய பிறகு, விராட் கோஹ்லி தன்னிடம் Sandpaper இல்லை என்று தனது பாக்கெட்களை ரசிகர்களிடம் காண்பித்து கேலி செய்தார்.
அவரது இந்த சைகைக்கு பார்வையாளர்கள் ஆர்ப்பரித்து கூச்சலிட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் கேமரூன் பான்கிராஃப்ட், போட்டியின்போது பந்தின் வடிவத்தை மாற்றியதால் தடைகளை எதிர்கொண்டார்.
அவருக்கு உதவியதாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருமே கிரிக்கெட்டில் இருந்து ஓர் ஆண்டு தடை செய்யப்பட்டனர்.
அதேபோல் கோஹ்லியின் சைகை தற்செயலாக ஸ்மித்தின் வெளியேற்றத்திற்கு பின் வந்ததால் மைதானம் ஆரவாரமானது.