ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா
5 தை 2025 ஞாயிறு 14:13 | பார்வைகள் : 491
பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா லிவர்பூல் அணியில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.
எகிப்து கால்பந்து ஜாம்பவான் முகமது சாலா (Mohamed Salah) லிவர்பூல் கிளப்பில் விளையாடி வருகிறார்.
ஆனால் சாலாவின் தற்போதைய ஒப்பந்தம் பிரீமியர் லீக் சீசனின் முடிவில் காலாவதியாகும்.
மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ளதால், கிளப்பில் தனது கடைசி சீசனில் விளையாடுவதாக சாலா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பல மாதங்களாக சாலாவின் முகாமில் ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இருப்பினும், அவரும் தனது கிளப்பும் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
முகமது சாலா கூறுகையில், "லிவர்பூலுடன் பிரீமியர் லீக்கை வெல்வதே பட்டியலில் இருந்த முதல் விடயம். கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக எனது நேர்காணல்களில் நான் எப்போதும் சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல விரும்புகிறேன் என்று கூறுவேன். ஆனால் லிவர்பூலுடன் பிரீமியர் லீக்கை வெல்ல விரும்புகிறேன் என்று நான் கூறுவது இதுவே முதல் முறை" என்றார்.
முகமது சாலாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும், லிவர்பூல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. முகமது சாலா பிரீமியர் லீக் தொடர்களில் 174 கோல்கள் அடித்துள்ளார்.
அதேபோல் தேசிய அணிக்காக 59 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.