Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற காலநிலை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை.. 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

5 தை 2025 ஞாயிறு 17:58 | பார்வைகள் : 2384


சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனவரி 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து நாளை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Meteo France அறிவித்துள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Aisne, Ardennes, Eure-et-Loir, Indre-et-Loire, Loir-et-Cher, Loire, Loiret, Maine-et-Loire, Marne, Meuse, Rhône, Sarthe, Paris, Seine-et-Marne, Yvelines, Vendée, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் எனவும், மேற்குறித்த மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்