Sartrouville : தொடருந்து மோதி ஒருவர் உயிருக்கு போராட்டம்!!
6 தை 2025 திங்கள் 01:33 | பார்வைகள் : 1286
30 வயதுடைய ஒருவர் தொடருந்து மோதி படுகாயமடைந்துள்ளார். அவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை Sartrouville தொடருந்து நிலையத்தில் (Yvelines) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 7 மணி அளவில் குறித்த நபர் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். RER A தொடருந்து ஒன்று அவரை மோதித்தள்ளியது. தள்ளிவிடப்பட்டாரா என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.
பத்து வரையான மருத்துவ உதவிக்குழுவினர் குறித்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிருக்கு போராடும் நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து Nanterre-Préfecture தொடக்க. Maisons-Laffitte வரையும், Nanterre-Préfecture தொடக்கம் Achères Grand-Cormier வரையுமான போக்குவரத்து தடைப்பட்டது.
பின்னர் இரவு 8.30 மணி அளவில் போக்குவரத்து சீரடைந்தன.