இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
2 ஆனி 2018 சனி 16:30 | பார்வைகள் : 18946
சென் நதிக்கு இந்தப்பக்கம் நான்காம் வட்டாரம்... அந்தப்பக்கம் ஐந்தாம் வட்டாரம்... இன்று நாம் இந்தப்பக்கமே நிற்கலாம்!!
நான்காம் வட்டாரம் மொத்தம் 1.6 சதுர கிலொமீட்டர்கள் அகலம் கொண்டது. 396 ஏக்கர்கள். பரிசின் மூன்றாவது சிறிய வட்டாரம் இது.
இதன் மேற்கு பக்கத்தில் முதலாம் வட்டாரத்தையும், வடக்கு பக்கத்தில் மூன்றாம் வட்டாரத்தையும், கிழக்கு பக்கத்தில் 11 ஆம் 12 ஆம் வட்டாரங்களையும், தெற்கில் சென் நதி, அதை ஒட்டி ஐந்தாம் வட்டாரத்தையும் கொண்டுள்ளது.
தோராயமாக 30,000 மக்களை நிரந்தர வதிவாளர்களாக கொண்டிருந்தாலும், 41,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இது வேலைத்தளமாக உள்ளது.
புகழ்பெற்ற சத்தலே மெற்றோ நிகையமும் இங்கு தான் உண்டு. அதன் அருகே, Saint-Jacques-de-la-Boucherie எனும் தேவாலயம் உண்டு. 1509 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, 1525 ஆம் வருடம் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் 1797 ஆம் வருடம் பிரெஞ்சு புரட்சியின் போத் அந்த தேவாலயம் இடிக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் அந்த கட்டிடத்தின் நினைவாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டது.
உங்களுக்கெல்லாம் மிக பிடித்தமான Berthillon 'ஐஸ்கிரீம்' நிறுவனத்தின் தலைமையகம், விற்பனைக்கூடமும் நான்காம் வட்டாரத்தில் உள்ளது.
இவை தவிர, எண்ணற்ற பெரும் நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் இங்கு குவிந்துள்ளன.
இதே ஆச்சரியத்தோடு, காத்திருங்கள்.. ஐந்தாம் வட்டாரத்துக்குச் செல்லலாம்!!