மதுபோதை சாரதியை - பரிசில் இருந்து Saint-Denis வரை துரத்திச் சென்று கைது செய்த காவல்துறை!
6 தை 2025 திங்கள் 07:11 | பார்வைகள் : 2473
மதுபோதையில் மகிழுந்தைச் செலுத்திய சாரதி ஒருவரை பரிசில் இருந்து Saint-Denis வரை துரத்திச் சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ஜனவரி 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard Ney பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்துக்கிடமான மகிழுந்து சாரதி ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால் குறித்த நபர் அவர்களது கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றுள்ளனர். மகிழுந்து Porte de Clignancourt சுற்றுவட்ட வீதியில் ஏறி தப்பிச் சென்றது. இறுதியாக அவர் Saint-Denis நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.