Paristamil Navigation Paristamil advert login

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!

26 வைகாசி 2018 சனி 10:30 | பார்வைகள் : 18759


இரண்டாம் வட்டாரத்துக்கு பின்னர்,  பரிசுக்குள் உள்ள மிகச்சிறிய வட்டாரம், இன்றைய நாள் நாம் பார்க்க இருக்கும் மூன்றாம் வட்டாரம்!!
 
மூன்றாம் வட்டாரத்தில் என்ன ஸ்பெஷல்? பிரான்சில் மிக பண்டைய கால கட்டிடங்கள் இன்னமும் உயிர் வாழ்கிறதென்றால்... அது மூன்றாம் வட்டாரத்தில் தான். 
 
இங்குள்ள rue de Montmorency இல்,  1407 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று உள்ளது. அடேங்கப்பா... 610 வருடங்கள் ஆகிவிட்டது. 
 
Pletzel ( פלעצל) இதை உங்களால் வாசிக்க முடிகிறதா... யூதர்களின் வழிபாட்டுத்தலத்தை இப்படித்தான் அழைப்பார்கள். மூன்றாம் வட்டாரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த கட்டிடம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 
 
சீனாவின் Wenzhou பகுதியில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த சீன இன மக்கள், இங்கு மூன்றாம் வட்டாரத்தில் மிகப்பெரும் சந்தை ஒன்றை வைத்துள்ளார்கள். சுருக்கமாக, அங்கு கிடைக்காததே இல்லை எனலாம். 
 
1.171 சதுர கிலோமீட்டர்கள் அகலம் கொண்டது இந்த வட்டாரம். அதாவது 289 ஏக்கர்கள். பரிசின் இரண்டாவது சிறிய வட்டாரம் இது.  
 
1860 ஆம் ஆண்டில், இங்கு 99,116 மக்கள் வசித்தனர். அத்தனை நெருக்கமாக வாழ்ந்த அந்த மக்கள் மெல்ல மெல்ல நகரப்புறங்களை விட்டு விலகி, தற்போது 35,100 பேர்வரை வசிக்கின்றார்கள் என தரவு சொல்கின்றது. 
 
1622 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Victor Hugo பாடசாலை இங்குதான் உள்ளது. Victor Hugo குறித்து சமீபத்தில் பிரெஞ்சு புதினத்தில் படித்திருப்பீர்கள்...!! 
 
இங்கு இன்னுமொரு ஸ்பெஷல், எண்ணற்ற அருங்காட்சியகம் குவிந்துள்ளமை தான். விடுமுறை கிடைத்தால், மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அருங்காட்சியகத்தை ஒரு நோட்டம் விட்டுவிட்டு வாருங்கள்..!!
 
நாளை நான்காம் வட்டாரத்துக்குச் செல்லலாம்..!! 
 
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்