Paristamil Navigation Paristamil advert login

மகிந்தவின் பாதுகாப்புக்கு 6 பொலிஸார் போதும் என கூறும் விக்னேஸ்வரன்!

மகிந்தவின் பாதுகாப்புக்கு 6 பொலிஸார் போதும் என கூறும் விக்னேஸ்வரன்!

6 தை 2025 திங்கள் 15:55 | பார்வைகள் : 545


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் பாதுகாப்புக்கு ஆறு பொலிசாரே போதும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மகிந்த ராஜபக்‌சவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச அவரது பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளினால் அவருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் மகிந்தவுக்கு அவரது மெதமுலனை நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றதா என்பது குறித்து தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்‌சவின் பாதுகாப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட ஆறு பொலிசாரே போதுமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்