”அவர்கள் நன்றி தெரிவிக்க மறந்துவிட்டனர்!” - ஜனாதிபதி மக்ரோன் சீற்றம்!!
7 தை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2015
மத்திய ஆபிரிக்காவின் Chad நாட்டில் இராணுவ நடவடிக்கையில் பிரெஞ்சு இராணுவம் ஈடுபட்டிருந்தது. 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த நடவடிக்கை பின்னர் இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து முடிவுக்கு வந்து, பிரெஞ்சு இராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
அதை அடுத்து, Chad நாட்டின் அரசியல் தலைவ ஒருவர் “பிரான்சுடன் எங்களுக்கு எந்த பிணக்கும் இல்லை. ஆனால் பிரெஞ்சு அதிகாரிகள் ஆபிரிக்க மக்களை மதிக்க கற்க வேண்டும். அவர்கள் எங்களை இழிவாக நடத்தினார்கள்” என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “அவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவிக்க மறந்துவிட்டனர்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார். ”பரவாயில்லை.. அது காலப்போக்கில் வரும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.