Paristamil Navigation Paristamil advert login

சீனா களமிறக்கியுள்ள அடுத்த AI மாதிரி - எச்சரித்துள்ள தொழில் நுட்ப நிபுணர்கள்

சீனா களமிறக்கியுள்ள அடுத்த AI மாதிரி -  எச்சரித்துள்ள தொழில் நுட்ப நிபுணர்கள்

11 மாசி 2025 செவ்வாய் 11:56 | பார்வைகள் : 668


டீப்சீக்(Deepseek) AI வெளியாகி பேசுபொருளாக உள்ள நிலையில் தற்போது AI மாதிரியொன்றை சீனா(China) வெளியிட்டுள்ளது.

OmniHuman- என்ற மேம்பட்ட AIயை டிக் டொக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட்டேன்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த AI டீப் போலி காணொளிகளை ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து உருவாக்க கூடிய திறனை கொண்டுள்ளது.

AI தொழில் நுட்பத்தில் புதிய திருப்பத்தை இந்த AI ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

டீப்ஃபேக் தொழிநுட்பத்தை வைத்து தவறாக பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.

இந்த OmniHuman 1 AI ஒரே ஒரு படத்தை கொண்டு ஒருவரின் முழு உருவத்தை அப்படியே உருவாக்கும் திறன் கொண்டது என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முந்தைய AI மாதிரிகள் டீப்ஃபேக் காணொளிகளை உருவாக்க ஆயிரக்கணக்கான படங்கள் தேவைப்பட்டன.

ஆனால் பைட்டேன்ஸ் நிறுவனத்தின் AI மாதிரி ஒரே ஒரு புகைப்படத்தை வைத்தே நம்ப முடியாத அளவுக்கு பெறுபேறு கொடுப்பதால் இது தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தொழில் நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்